நாட்பட்ட நோயாளர்கள் சமூகத்திற்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு!

Tuesday, December 1st, 2020

நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டோர் தமது நோயைக் கட்டுப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமாகும் என தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கையில் குறைவை காணக்கூடியதாக இல்லை எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் ஒன்றிணைவது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணிப்போரில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய அவர் இதன் காரணமாக நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டோர் தமது நோயைக் கட்டுப்படுத்திக் கொள்வது அத்தியாவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இவ்வாரானோர் சமூகத்திற்குள் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகள் வீடுகளிலேயே கிடைக்கக் கூடியதான வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: