நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை – முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!

Thursday, April 9th, 2020

நாட்டை முழுமையான அளவில் முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை முழு அளவில் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நேற்றைய தினம் அலரி மாளிகையில் சந்திப்புக்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த சந்திப்புக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

Related posts: