நாட்டை சரியாக வழிநடத்த மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Monday, August 15th, 2016

வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை சரியான பாதைக்கு இட்டுச்செல்ல மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபும் பிரதேசத்தில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இந்த இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைபெறும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் கவனம் செலுத்தினார். இதன்போது உரம், விவசாய உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர்  இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Related posts:


தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடி...
ஜனாதிபதி, பிரதமர் நாட்டில் இல்லாத வரலாற்றுச் சம்பவம் இலங்கையில் பதிவு - நாட்டின் தற்காலிக தலைவரானார்...
சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை - சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணை...