நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி – இராணுவ தளபதி அறிவிப்பு!
Sunday, August 22nd, 2021நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் முதல் கட்டத்தில் மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கு பின்னர் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
சிவபூமி அறக் கட்டளையின் தலைவரானார் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் தரப்படுத்தப்படுவது அவசியம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|