நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, March 27th, 2021

நாட்டில் வசிக்கும் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்புறுபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் காரணமாக பலர் தேசிய அடையாள அட்டைகள் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் நெருங்கும் போது மட்டுமே அரசியல்வாதிகள் தேசிய அடையாள அட்டை தொடர்பாக கூறி வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை - அமைச்சர் டலஸ் அல...
கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவை...
பாதுகாப்பு தொடர்பில், எவ்வித பிரச்சினையும் இல்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு...