நாட்டில் வேலையின்மை வீதம் முதல் காலாண்டில் 4.3 வீதமாக குறைந்தது – சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!
Saturday, August 13th, 2022இலங்கையின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை போன்றே 2021 ஆம் ஆண்டின்முதல் காலாண்டிலும் வேலையின்மை வீதம் 5.7 சதவீதமாக இருந்ததாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் 373,272 தனிநபர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும்.
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் பொருளாதார ரீதியாக இயங்குவோர் தொகை 8,761,803 ஆக இருந்தது. அதில் 64.6 வீதம் ஆண்களும், 35.4 வீதமானவர்கள் பெண்களுமாவர்.
பொருளாதார ரீதியில் இயங்கும் மக்கள் தொகையில், 4,884,513 க்கும் அதிகமானோர் பணியாளர்களாகவும், 226,907 பேர் முதலாளிகளாகவும், 2,804,934 பேர் சொந்த தொழில்புரிபவர்களாகவும், 472,176 பேர் குடும்பப் பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். இலங்கை சனத்தொகையில் 1,253,145 பேர் அரச துறையில் பணியாற்றுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|