நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Tuesday, May 25th, 2021

கொரோனா மூன்றாவது அலை காரணமாக மருத்துவமனை கட்டமைப்பில் அதிகரித்துள்ள பிராணவாயு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலையின் கீழ் அடையாளங் காணப்படும் பெரும்பாலான நோயாளர்கள் மோசமான நிலைமையை அடைகின்றனர்.

அவ்வாறான நோயாளர்களுக்கு ஒட்சிசன் விநியோகத்துடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதற்கமைய, மோசமடைந்த நிலைமையை அடையும் நோயாளர்களுக்கு பிராணவாயு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் படிமுறைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய நாடு முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வைத்தியசாலைகளில், மோசமான உடல் நிலையை அடையும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய Wall Oxgen உபகரணங்களுடன் கூடிய விசேட அவசர சிகிச்சை பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூர பிரதேசங்களில் உள்ள 15 வைத்தியசாலைகளில் 15 பிராணவாயு உற்பத்தி இயந்திரங்களை அமைப்பதற்கும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் 100 நடமாடும் பிராணவாயு பிறப்பாக்கி இயந்திரங்கள் வீதம், 25 மாவட்டங்களுக்கும் என்ற ரீதியில் வழங்குவதன் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் பிராணவாயு உருளைகளுக்கான கேள்வியை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், மருத்துவ ஒட்சிசனுக்கு அதிகரிக்கும் கேள்விக்கான விநியோகத்திற்காக மாதாந்தம் 120 ஆயிரம் லீற்றர்கள் திரவ பிராண வாயுவை இறக்குமதி செய்து போதுமானளவு இருப்பை நாட்டில் பேணவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு - மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர...
தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் - மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பம் – ஆசனங்களுக்கு அமைவ...
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...