நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடிப்பது தொர்பில் தீர்மானிக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Monday, August 30th, 2021

நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஆகியன தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய வைத்தியசாலையின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்று என்பது சாதாரண நோய் அல்லவெனவும் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது பரவிவரும் கொரோனா நிலைமை குறித்து கருத்திற் கொண்டே, நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தியே, நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கடுமையான சுகாதார நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.

நாடு தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு துறைகள் குறித்து கருத்திற்கொண்டே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் - ஜெனீவாவி...
புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது - அமைச்சர் காஞ்சன வ...
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!