நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் – மானியம் வழங்கவும் அமைச்சர் யோசனை!

Monday, December 5th, 2022

அடுத்த வருடம் நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபா செலவிடவேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஓர் அலகுக்கு 56.90 ரூபா என்ற நிலையான கட்டணம் அறவிடப்பட வேண்டும். அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது தமது யோசனை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி நாட்டின்ல 67 இலட்சத்து 9 ஆயிரத்து 574 மின்சார வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், ஓர் அலகிற்கு தற்போதைய சராசரி கட்டணம் 29.14 ரூபா என்றும் பற்றாக்குறை 423.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை 0-30 அலகு தொகுதியில் 1,460,828 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 8 ரூபாவை செலுத்துகின்றனர்.

அதேபோன்று 30-60 அலகு தொகுதியில் 1,683,172 நுகர்வோர் உள்ளனர். அவர்கள் ஓர் அலகுக்காக 10 ரூபா செலுத்த வேண்டும்.

60-90 அலகு தொகுதியில் 1,702,515 நுகர்வோர் உள்ளனர். ஓர் அலகு்ககாக 16 ரூபாவை அவர்கள் செலுத்த வேண்டும்.

90-180 அலகு தொகுதியில் 1,559,131 நுகர்வோர் உள்ளனர் ஓர் அலகுக்காக 50 ரூபாவை செலுத்த வேண்டும்.

180 மேற்பட்ட அலகு தொகுதியில் உள்ள 303,928 நுகர்வோர் ஓர் அலகுக்காக 75 ரூபாவை செலுத்துகின்றனர் என்று அமைச்சர் கூறினார்.

கீழ் அடுக்குகளுக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படுவதாகவும், மானியத்தின் ஒரு பகுதியை ஈடுசெய்ய மேல் அடுக்கினர் ஓர் அலகுக்கான சராசரி செலவை விட அதிகமாக செலுத்துவதாகவும், மீதமுள்ள மானியம் திறைசேரியினால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்க...
வடக்கு கல்வி நிர்வாக மோசடிகளை விசாரிக்க சுயாதீன விசாரணை குழு வேண்டும் - ஆசிரியர் சங்க உப தலைவர் வலி...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு!