நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, November 10th, 2023

நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை(13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக. கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், சபரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: