நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 349 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் திவுலுபிட்டிய, பெலியகொட, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 28 ஆயிரத்து 401ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு 400 மில்லியன் வருமானம்!
15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை - ஆட்பதிவு திணைக்களம்!
நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிப்ப...
|
|