நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தில் –  எச்சரிக்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !

Sunday, February 18th, 2018

தற்பொழுது நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஸ்திரமான அரசியல் நிலைமை உண்டு என்பது நிரூபிக்க தவறும் பட்சத்தில் பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இந்த நிலைமை நீடித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் சக்தியேனும் நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: