நாட்டின் கல்விக் கொள்கை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, September 8th, 2023

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எப்பாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்த நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறையானது உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக அமையும் வகையில் வடிவமைக்க தாம் எதிர்பார்த்திருப்பதாகவும், விரைவான கல்வி சீர்திருத்தங்கள் மூலம் குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் அவர் குறிப்பிடட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் புதிய கல்வி முறைக்கான அவசியம் தோன்றியுள்ளது.  அதற்கமைய அடுத்து வரும் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு பொருத்தமான வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: