நாடு முழுவதும் உரிய சட்ட வரையறைகளுக்கு உட்படாமல் 354 மதுபானசாலைகள் !

Sunday, March 4th, 2018

நாடு முழுவதும் உரிய சட்ட வரையறைகளுக்கு உட்படாமல் 354 மதுபானசாலைகள் காணப்படுவதாக மாவட்ட உதவி மதுபானசாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கினைப்பு குழு இன்று  யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதம் இடம்பெற்ற போதே இவ்வதறு  தெரவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு உரிய தூர இடைவெளிக்குள் இல்லாத மதுபானசாலைகளை கண்டறிவது தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே நாடுமுழுவதும் இவ் எண்ணிக்கையிலான மதுபானசாலைகள் காணப்படுவது கண்டறியப்பட்டன.

மேலும் இவற்றில் 08 மதுபானசாலைகள் யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாகவும் அவற்றில் நான்கு தொடக்கம் ஐந்து வரையான மதுபானசாலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என;றும் அவர்  குறிப்பிட்டார். இதேவேளை யாழில்  64 மதுபானசாலைகள் இருப்பதவும் குறிப்பிட்டார்.

 

Related posts: