நாடு முடக்க நிலையில் இருந்தபோது 5242 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 1642 பாலியல் துஸ்பிரயோகங்கள் பதிவு – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!

Sunday, July 26th, 2020

இலங்கையில் இந்த ஆண்டு ஜீலை மாத நடுப்பகுதியில் 5242 சிறுவர் துஷ்பிரயோகங்களும், 1642 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இவை நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தின்போது,

2020 முதல் 15 நாட்களுக்கு, சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளின் எண்ணிக்கை 54 ஆக இருந்தது தெரியவந்தது. ஏறக்குறைய மூன்று மாத காலத்திற்கு நீடித்த பூட்டுதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு மூலம்

சிறுவர்கள் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: