நாடுமுழுதும் 20 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை வெற்றி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, July 24th, 2022

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், QR குறியீட்டின் கீழ் 20 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, 4,708 வாகனங்கள் வெற்றிகரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வழிவகைகள் செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 25 இடங்களில் எரிபொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருந்ததாகவும், கோரப்பட்ட இருப்பு வழங்கப்படாமை, தாமதம் மற்றும் விநியோக குறைபாடுகள் காரணமாக மேலும் 5 இடங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பரிசோதிக்க முடியாமல் போனதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

அந்த 5 நிரப்பு நிலையங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களில் அனுமதிப்பத்திரம் சோதனையிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: