நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!
Monday, June 1st, 2020நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அரசாங்க அச்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய மாவட்ட மட்டத்தில் அச்சிடப்பட வேண்டிய வாக்குகளடங்கிய விபரங்கள் தனித்தனிப் பிரிவுகளாக கையளிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் எந்த ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு சூனியம் ஆக்கப்பட்டால் அதற்குப் பதிலாக புதிய வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆணையாளர் நாயகம் அரசாங்க அச்சகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் ஒரு கோடியே 72 இலட்சத்து 73 ஆயிரத்து 300 அட்டைகளை அச்சிடுவதற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவை 3 இலட்சத்து 45 ஆயிரத்து 466 புத்தக கட்டுகளாக கட்டப்படவுள்ளன.
இதுதவிர இரட்டை வாக்குச்சீட்டுகளாக 4 இலட்சத்து 14 ஆயிரத்து 525 வாக்குச் சீட்டுக்கள் 16 ஆயிரத்து 581 கட்டுகளாக தயார்படுத்த படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|