நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ஸ!

Thursday, June 9th, 2022

தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது தேசியப் பட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலம் பொதுஜன பெரமுன கட்சியினூடாக பொருத்தமான ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது  குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச...
பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரது ஓய்வு குறித்து ஜனாதிப...
இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது – நிதி அமைச்சர்...