நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பிரதமர் தெரிவிப்பு!

Monday, October 25th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரசாங்கக் கட்சி உறுப் பினர்கள் குழுவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் இல்லாமை தொடர்பாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கருத்து தெரிவித்தபோது –

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் காலம் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதால் அவர்களுக்கு வாகனங்கள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: