நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பான அறிக்கை 5 நாள்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்!

Thursday, April 29th, 2021

நாடாளுமன்றிலும் அதற்கு வெளியேயும் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் இடைக்கால அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த இடைக்கால அறிக்கை எதிர்வரும் செவ்வாய்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்றுக் கூடிய குறித்த நாடாளுமன்ற குழு, சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டீ.வி காணொளி பதிவுகளை பார்வையிட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 8 பேர் கொண்ட நாடாளுமன்ற குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts: