நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!

Friday, June 3rd, 2022

நாடாளுமன்றுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாடாளுமன்றுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்பதே புலனாகின்றது எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சிலர் நாட்டின் சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுதில்லை என ஊடகமொன்றுக்கு தெரிவித்த சபாநாயகர், இதன்படி நாடாளுமன்றில் கூட்டங்களை நடத்தும் போது தற்பொழுது வழங்கப்படும் பாதுகாப்பினை விடவும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகல் உணவு வழங்குவதனை நிறுத்தினால், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வர நேரிடும் எனவும் இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் உணவு பொதிக்குள் குண்டு வைத்து நாடாளுமன்றுக்கு கொண்டு வரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: