நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தை சான்றுப்படுத்தினார் சபாநாயகர்!

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுப்படுத்தினார்.
2009 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான, திருத்தச் சட்டமூலத்தில் இன்று (15) கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை சான்றுப்படுத்தினார்.
மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கடந்த 9 ஆம்திகதி குறித்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளியொருவரின் பணத்தைத் திருடிய இளைஞர்கள் இருவருக்கு விளக்க மறியல்
தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றிற்கே உரியது: பொலிஸாருக்கு கிடையாது!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது - மலேஷிய பிரதமர் !
|
|