நாடாளுமன்றின் அனுமதியின்றி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படக் கூடாது – ஜனாதிபதி!

அரசாங்கத்தினால் கையொப்பமிடும் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து உடன்படிக்கைகளுக்கும் நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் அனுமதியின்றி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கைத்தொழில் முதலீட்டு வலயமொன்றினை உருவாக்குவதற்கு ஹம்பாந்தோட்டையில் சீனாவிற்கு 15000 ஏக்கர் காணி வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அனுமதியின்றி தேசிய ரீதியில் முக்கியமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டால் அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|