நாடாளுமன்றத் தேர்தலே நெருக்கடி நிலைக்கு தீர்வு – முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Tuesday, May 10th, 2022

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்ற தேர்தல் மாத்திரமே தீர்வாகும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,தமது கட்சியின் நிலைப்பாடு இதுவாகும் என குறிப்பிட்டார்.

மக்களின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் அரசியலமைப்பில் திருத்தங்களையும் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்து நிலையான நாடாளுமன்றமொன்றை அமைப்பதற்கு பொதுத் தேர்தல் சந்தர்ப்பமளிக்கின்றது.

அரசியலமைப்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தமது கட்சி ஏற்கெனவே பல யோசனைகளை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் தலைமையில் கூடும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துவதும் ஜனநாயக நாடாளுமன்ற முறையின் இருப்பும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான தேவையும் தற்போது உணரப்பட்டுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: