நாடாளுமன்றத்தில் நாளை விசேட அமர்வு!

Thursday, April 27th, 2017

மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய நாடாளுமன்றத்தில் நாளை விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

குப்பை முகாமைத்துவம் தொடர்பாக வெளியிடப்படவேண்டிய சில வர்த்தமானிஅறிவித்தல்களுக்கான அனுமதி இந்த அமர்வில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமா அறிவித்தல் நாளை மறுதினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அன்றையதினமே விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விடயம் குறித்து இன்றையதினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் மூலமாக மேற்கொள்ளப்படும் குப்பைகளை அகற்றும் பணியானது அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அண்மையில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: