நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு ஆரம்பம்!

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதிக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் மூலமாக 8ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்: ஆளுநர் றெஜினோல்ட் குரே!
தாதியர் பயிற்சி: விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு - சுகாதார அமைச்சு!
யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் - அளவெட்டி கனி வைத்தியசாலையில் அறுமதி!
|
|