நாடளாவிய ரீதியில் மீண்டும் இன்றுமுதல் மின் துண்டிப்பு!

Friday, February 18th, 2022

நாடளாவிய ரீதியில் இன்று 18 ஆம் திகதிமுதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 2.30 மணிமுதல் 6.30 மணி வரை 1 மணிநேரமும், மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 45 நிமிடங்களும் மின் துண்டிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கட்டாய மின் துண்டிப்பு அவசியம் என்றும், அதற்கான வழிமுறை அறிவிக்கப்படும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்திருந்தது. இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: