நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்திற்கு இடையூறு!

Sunday, November 20th, 2016
மின்உற்பத்தி நிலையங்களில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகளின் தாமதத்தால் மின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படும் என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீண்டகால மின் உற்பத்திக்காக திட்டமிடப்பட்டுள்ள மின் நிலையங்களின் நிர்மாணப்பணிகள் தாமதமடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜமுனா சமரசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது,நிர்மாணப் பணிகளின் தாமதம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தேவையான அறிக்கைகள் தயார் செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜமுனா சமரசிங்க தெரிவித்துள்ளார்.

powerlines-620x360