நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைப்பு!

Thursday, July 11th, 2019

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 136 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 159 ரூபா என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 131 ரூபா என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை தொடர்ந்தும் 104 ரூபாவாகக் காணப்படும்.

சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 65 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளமையால், அதன் பலனை நாட்டு மக்கள் அனுபவிக்கும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை மீளமைப்பு அடிப்படையிலேயே இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லங்கா loc நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா loc நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts: