நல்லூர் பிரதேச வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Thursday, August 18th, 2016

நல்லூர் பகுதியை சேர்ந்த வறிய மக்களுக்கு  ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம்(18) நல்லூர் கால்நடை திணைக்களத்தில் குறித்த உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த பகுதியைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறிய பயனாளிகளது சுயதொழிலுக்காக கோழிக்குஞ்சுகளை நிகழ்வின் அதிதியாக கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் வழங்கிவைத்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா அவர்களது 2016  ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ் உதவிகள் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருதொகுதி வறிய மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் நல்லூர் கால்நடைதிணைக்கள வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.மகேந்திரராஜா மேலதிக வைத்திய அதிகாரி வி.யசீவன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.வினோதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

unnamed

unnamed (1)

Related posts: