நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – சபை அமர்வில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Tuesday, July 21st, 2020

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவகாலத்தில் அடியவர்கள் சுகாதார முறைகளை பேணுவதற்கான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு விழிப்புணர்வுகளை  மேற்கொள்ள யாழ் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது.

யாழ் மாநகர சபையில் நல்லூர் திருவிழா தொடர்பான விஷேட அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் விரஸ்தாபிக்கப்பட்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு அவர்களால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது –

எதிர்வரும் 25 ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருமாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டை அச்சுறுத்தும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகளவில் ஆலய திருவிழாவில் பங்கபற்றுவது தடைசெய்யப்பட்டள்ளது.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வெண்டம் என்றும் பங்குபற்றுபவர்களது எண்ணிக்கை வரையறையும் செய்யப்பட்டள்ளது.

இந்நிலையில் ஆலய திருவழா காலத்தில் கடமையிலிரக்கம் யாழ் மாநகர சபை சுகாதார தரப்பினருடன் பொதுமக்கள் முரண்படும் வாய்ப்பக்கள் அதிகம் காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது நோய்த்தொற்றின் ஆபத்து தொடர்பில் அரசு அதிகளவு எச்சரிக்கைகள் விடுத்துவருகின்ற போதிலும் பொதுமக்கள் அது தொடர்பில் அசமந்தமாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நல்லூர் உற்சவ காலத்தில் சுகாதார நடைமுறையை பேணுவதில் அதிக பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்படும். இதை தடுப்பதற்கு எமது சபையால் பொதுமக்களுக்கு விழ்ப்புணர்வுகளை ஊட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து பொதுமக்கள் சகாதார தரப்பினர் இடையேயான முரண்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இக்காலப்பகுதியில் வெளியிடங்களிலிருந்து வரும் எத்தகைய நபர்களுக்கும் கடைகளை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படக் கூடாது என்றும் இதன்போது அவர் மேலும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: