நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவு!

Saturday, March 25th, 2017

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும்  கல்வி அமைச்சும் இணைந்து நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவொன்று ஆரம்பித்துள்ளன.

நாட்டிலுள்ள மாணவர், மாணவிகள் மத்தியில் தேசிய ஐக்கியம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இதற்காக தற்பொழுது சகோதார பாடசாலை திட்டம், மதம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  ஆசிரியர்களுக்காக விசேட பயிற்சி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட பாடசாலையின் மூலம் முன்னெடுக்கக் கூடிய திட்டங்களும் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts: