நல்லாட்சிக் கால நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமனம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

கடந்த நல்லாட்சிக் காலத்தில் அரச வங்கிகளின் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக, ஆணைக்குழு ஒன்றை விரைவில் நிறுவ உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தினர் அலரி மாளிகையில் நேற்றைய தினம் பிரதமரைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது, அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச வங்கிகளில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஓய்வுபெறும்போது, ஓய்வூதியம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் குழு ஒன்றின் மூலம் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!
வடபகுதி காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - எடுத்துச் செல்லப்பட்ட கோப்புக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்...
மின் கட்டண திருத்தம் - யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சா...
|
|