நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் இன்று!

Wednesday, July 10th, 2019

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை (11) மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதாக சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: