நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!

Friday, June 2nd, 2017

பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக ஏனைய மாவட்டங்களிலுள்ள மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றியதற்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட மக்களுக்காக ஏனைய மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக காலி மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கையளித்தார். இதுதொடர்பான நிகழ்வு காலியில் இடம்பெற்றது.

நேற்று முற்பகல் காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திறகுப் பின்னர் ,  அனர்த்த நிவாரண சேவை அலுவலர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி , பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டினார். பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக பொலன்னறுவை, அனுராதபுரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மன்னார், மொனராகலை, குருணாகல், புத்தளம், மாத்தளை, கண்டி, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றியதற்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்

Related posts: