வவுனியாவில் நடைபாதை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Friday, January 20th, 2017

வவுனியா நகரசபை ஊழியர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபாதை வியாபாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாக கூறி இன்று(20) வவுனியா நகரசபை ஊழியர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நடைபாதை வர்த்தகர்களின் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட வர்த்தகப் பொருட்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு கூறி வர்த்தகர்கள் இருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த நடவடிக்கையால் நகரில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு வர்த்தகர்களையும் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: