நடுநிலையாக செயற்படுங்கள் – ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!

Monday, June 22nd, 2020

செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண தேர்தல் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சுவரொட்டிகள், பதாதைகள், புகைப்படங்கள் என்பவற்றை காட்சிப்படுத்த 1981 இலக்கம் 1 நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், வேட்பாளரின் தேர்தல் பிரசார அலுவலகங்களில் கட்சியின் பெயர், சின்னம், இலக்கம் என்பவற்றை காட்சிப்படுத்த முடியும்.

அத்துடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் பகுதியில் மாத்திரம் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியும். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது.

செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கும் எதிர்பார்ப்பாக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவ...
10 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது பைசர் நிறுவனம் – எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூ...
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...