தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம் ஆரம்பம்!

உடுவில் குபேரகா கலைமன்றம் நடத்தும் தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி இன்றுகாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த அணிகளின் பங்கேற்புடன் குறித்த போட்டித்தொடர் இன்றையதினம்(26) ஆரம்பமானது.
குறித்த போட்டித்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றுகாலை பங்குபற்றும் அணிகளின் பங்கேற்புடன் சிறப்பு அதிதியாக கலந்துகொண் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன..
இதன்போது கட்சியின் உடுவில் பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட பிரமுகர்கள் உடனிருந்தனர்.
Related posts:
|
|