நச்சுப் பொருட்களற்ற உணவுக் கலாச்சாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, April 7th, 2021

உணவுப் பொருட்களின் தரம் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பண்டிகைக் காலத்தில் தரமான பொருட்கள் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தட்டுப்பாடு இன்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கும் பொறுப்பு வர்த்தக அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நச்சுப் பொருட்கள் அற்ற உணவுக் கலாச்சாரமொன்றை உருவாக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ரரஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: