தொழு நோயையும் விரைவில் குணப்படுத்த முடியும் – வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு!
Friday, February 8th, 2019தொழுநோயாளர்களற்ற 2020 ஆம் ஆண்டை உருவாக்குவதே எமது நோக்கம். தொழுநோயாளர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. உரிய சிகிச்சை மூலமாக அதைக் குணப்படுத்த முடியும் என்று தொழுநோய் பற்றிய மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழுநோய் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் அச்சத்தை ஒழிப்பதற்கும் தொழுநோயாளர்களைச் சமூகத்தில் வேறுபடுத்திப் பார்ப்பதைத் தடுப்பதற்கும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொழுநோய் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தனர்.
தொழுநோய்க்கு ஆரம்ப கட்டத்தில் உரிய சிகிச்சை முறைகள் காணப்படாவிட்டாலும் தற்போது அந்த நோய்க்கான சிகிச்சை விதிமுறைகள் மற்றும் காரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் இதற்கான சிகிச்சையை உரிய முறையில் பெறுவதன் மூலமாக முழுமையாகக் குணமடைய முடியும்.
இலங்கையில் ஆரம்ப கால கட்டங்களை விட தற்போது தொழுநோயாளர்களின் அளவு குறைந்துகொண்டு வருகின்றபோதிலும் அது தொடர்பில் இன்னும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அரிது என்றே கூற வேண்டும். அதனாலும் தொழுநோயாளர்களை அறிந்துகொள்வதில் காலதாமதம் ஏற்படுகின்றது. இந்த நோயின் அறிகுறிகள் நீரிழிவு நோயுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் இவர்களைச் சோதனைக்கு உட்படுத்துவதன் மூலமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களா என்று அறிந்துகொள்ள முடியும். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதன் மூலமாக நோயாளர்கள் முழுமையாகக் குணமடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|