தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் – தொல்பொருள் திணைக்களம் தகவல்!

Monday, January 18th, 2021

கடந்த காலங்களில் தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் தயாரிப்பதற்கும் அந்தத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தொல்பொருள் திணைக்களத்திற்கு அனைத்து தொல்பொருட்களையும் பாதுகாக்கக்கூடிய இயலுமை இல்லை என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்கிரியாகம – பலாகல – மஹஉருலுவ பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் பகுதி அழிக்கப்படுகின்றமை விடயம் குறித்து ஆராய்வதற்காக மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: