தொலைந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுக்க புதிய இணையத்தளம்!

Tuesday, December 11th, 2018

கைத்தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டலோ குறித்த இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக www.ineed.police.lk என்ற புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய குறித்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த முறைப்பாடு உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.