தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீ மேலும் தெரிவிக்கையில், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவு ஆகக்கூடிய முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.

இடைத்தங்கல் முகாம்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ‘அபாயம்’ ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மண்சரிவு முதலானவை தற்போது இடம் பெறுகின்றன.

இதன்போது இடம்பெயரும் மக்கள் தங்கும் இடைத்தங்கல் முகாம்களில் கொரோனா தொற்றுப் பரவல் அபாயம் உண்டு. இவ்வாறான சந்தர்பங்களில் இவர்கள் மத்தியில் கொரொனா தொற்றாளர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவும் நிலை உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

இத்தகைய முகாம்களுக்குச் சென்றால் முகக்கவசம் அணிந்திருப்பது மிக முக்கியமானது. அனைவரும் ஒன்று கூடாது குடும்பங்களாக தனித்தனியாக இடைவெளியை முன்னெடுத்து இருப்பது மிக முக்கியமானது என்று தெரிவித்தார். அத்தோடு முகாமிலுள்ள மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கை - அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் - 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெ...
பாலியல் சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் - கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழ...
அமெரிக்கா – இலங்கை இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது கவுன்சில் க...

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அல...
ஜப்பானின் உதவியுடன் சேதன பசனை தயாரிக்கும் தொழிற்சாலை வடமராட்சியில் - எதிர்வரும் ஞாயிரன்று அதிகாரபூர...
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் நாடுங்கள் - கராபிட்டிய வைத்தி...