தொற்றாநோயால் பாதிக்கப்படுவோர் தொகை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Tuesday, July 3rd, 2018

நாட்டில் தொற்றா நோய்களினால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றாநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 9500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை தொற்றாநோய் காரணமாக நாளாந்தம் 245 பேர் உயிரிழப்பதாகவும் தொற்றாநோய்ப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளதுவருடந்தோறும் 3 மில்லியன் பேர் தொற்றாநோய் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தொற்றாநோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

Related posts: