தொண்டர் ஆசிரியர் 676 பேருக்கு நியமனம்  வழங்குமாறு ஆளுநருக்கு மகஜர்!

Saturday, February 3rd, 2018

1044 தொண்டர் அசிரியர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட போதும் 676 பேர் மட்டும் தகுதியுடையவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அனால் அவர்களில் 182 பேரக்கு மாத்திரமே நியமனம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது தமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று கூறியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 676 பேரில் 182 பேரின் பெயர் விபரங்கள் மட்டுமே அண்மையில் வெளியிடப்பட்டன இந்த விடயம் சம்மந்தமாக வடக்குமாகாண கல்வி அமைச்சர் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம் சென்று எமது கேரிக்கைகளை முன்வைத்த போது அவர்கள் தகுதியுடைய 676 பேருக்கும் ஒரே மேடையிலேயே நியமனம் வழங்க  கல்வி அமைச்சருடன்  பேசி முடிவெடுப்பதாக எமக்கு உறுதி மொழி கூறியிருந்தார்

தேர்தல் காலப்பகுதி முடிந்தவுடன் 676 பேருக்கு நியமனம் வழங்குவதாக உறுதி செய்யப்பட்டது தற்போது 182 பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று அறிந்துள்ளோம் நீண்ட காலமாக வேதனமின்றிப் பாடசாலைகளில் கடமையாற்றும் நாம் இதனால் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் எனவே தகுதியுள்ள 676 தொண்டர் ஆசிரியர்களுக்கும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நியமனம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Related posts:

நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச ச...
எத்தனை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன் - அமைச்சர் ராஜித !
பாதுகாப்பான முறையில் எடுத்துவரப்படவில்லை: கொழும்பிலிருந்து வந்த தபால்களை விநியோகிக்க மறுத்து யாழ் த...