தொடர் மழை: வைரஸ் காய்ச்சலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்?

Tuesday, May 22nd, 2018

நாட்டில் நிலவும் மழையுடன் தென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சல் பரவிச் செல்லும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தால் நேற்றைய தினம் கம்புறுப்பிட்டிய, மாத்தறை மற்றும் கராபிட்டிய ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட பல இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.வைரஸ் காய்ச்சல் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

கராபிட்டிய, மாத்தறை, எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை மற்றும் வலஸ்முல்ல ஆகிய ஆரம்ப மருத்துவமனைகளில் தற்போது 600க்கும் அதிகமான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் காய்ச்சல் காரணமாக தென் மாகாணத்தின் சகல முன்பள்ளிகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென்மாகாண கல்வியமைச்சு இதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளது.

இதுதவிர, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ, முலட்டியன, தங்காலை மற்றும் வலஸ்முல்ல ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

Related posts: