தொடர் மழை – கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!

Thursday, April 14th, 2022

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு நீர்பாசனக் குளத்தின் நீர்மட்டம் 35அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இரணைமடு நீர்பாசனக் குளத்தின் தாழ் நில பகுதியில், வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாரதிபுரம், பொன்னகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர், மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.

அந்த பகுதிகளின் வீதிகளில் பயணிப்போரும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

000

Related posts: