தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Wednesday, August 11th, 2021

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சில குழுக்களின் தொடர் போராட்டங்களுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

“தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, கோவிட் தொற்று பரவுவதால் ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்கள் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இவை இடைநிறுத்தப்பட்டது.

உலகம் தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது, 500 முதல் ஆயிரம் வரையிலான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி பெரிய கொத்தாக உருவாக்கினர் என்று அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் அபாயகரமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதால், வைரஸ் பரவுவதைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்ற இதுபோன்ற கூட்டங்கள் தடுக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: