தொடர்ந்து 2 தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு தடை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு!
Saturday, November 5th, 2022எந்த கட்சியும் பதிவு செய்த பிறகு தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் போட்டியிட வில்லை என்றால் அந்த கட்சி தடை செய்யப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கட்சியினை பதிவு செய்பவர்கள் கூட்டணியில் சேர்ந்து நாங்கள் கூட்டணி மூலம் போட்டியிட்டோம் என்று கூறி குறித்த நிபந்தனையின் கீழ் செயல்படுகிறார்கள் எனவும். இந்த கூட்டணிகள் தொடர்பிலும் மற்றும் அதற்கான ஆவணங்கள், கட்சி அரசியலமைப்புகள் என்பது குறித்து எதிர் காலத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய, ஆணைக்குழுவின் தலைவர் –
இந்த நாட்டில் எழுத்தறிவு உயர் மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் மக்களின் அரசியல் கல்வியறிவு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிலர் நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றி தேர்தலில் போட்டியிட்டால் கூட அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.
அரசியலில் ஈடுபட ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி தேவை என்றாலும், நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நடத்தை அவசியம் என்று ஆணைகுழு எதிர்பார்க்கின்றன. எவ்வளவு புத்திசாலி வேட்பாளராக இருந்தாலும், இந்த குணங்கள் இல்லாவிட்டால் அவர் அரசியலுக்கு தகுதியானவர் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரபல மாடல் அழகி, நடிகர், நடிகை, பாடகி, கிரிக்கெட் வீரர் தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் அவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதாகவும், சிறையில் இருந்து வெளியே வந்தால் அவர் போட்டியிடும் நிலை நாட்டில் இருப்பதாகவும் அவ்வாறு தேர்தலில் போட்டியிட்டால். மற்ற அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும்.வாய்ப்பு இருப்பதை நாம் அவதானிக்கலாம்
மேலும் ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தாலும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவை எனவும் அரசியலுக்கு உயர் கல்வித் தகுதி வேண்டும் என்ற சித்தாந்தத்தை சிலர் கட்டமைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|