தொடர்ந்தும் 24 நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கம்!

Saturday, February 3rd, 2018

பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுமேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மாதத்திற்கு குறித்த வங்கி நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கி வைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளே முடக்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: